வரலாற்றில் முக்கியமான நிகழ்வு மருதம் உருவாக்கம் ஆனால் அந்த திணை உருவாக்கம் என்பது பல துரோகங்களை உள்ளடக்கியது. முல்லை நில மக்கள் பெருக்கத்திற்காக கீழ் நோக்கி சென்று வயல்கள் அமைத்து விவசாயம் செய்தன என்பனவெல்லாம் ஏமாற்று வரலாறு, மக்கள் பெருக்கம் என்றால் இன்னொரு காட்டை உருவாக்கி அங்கே குடிபெயர முயல்வானே தவிர தாங்கள் வாழும் காட்டை அழித்து அதில் வாழ துளியளவும் நினைத்திருக்க மாட்டான்
விருந்திரன்-இந்திரன் போர்
விருந்திரன் என்பவன் முல்லை நில இடையர் மக்களின் தலைவன். முல்லை நிலம் என்பது காடுகளால் சூழப்பட்ட பகுதி மக்கள் அனைவரும் சிறுதானியம் கிழங்கு வகைகள் என தனக்கு தேவையான மற்றும் வாழ அவசியமான அத்தியாவசிய பொருட்களை தானே உற்பத்தி செய்து தானே உண்டு இயற்கையை அழிக்காமல், இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வந்தான்
இந்த காலத்தில்தான் உலகம் முழுதும் காடுகளை அழித்து வணிகம் செய்யும் கும்பல்கள் உலகம் முழுதும் ஆதிகக்ம் செய்ய முனைந்தன. கடைமுல்லை பகுதிகளை அழித்து வயல்பகுதிகளை உருவாக்க வணிக கும்பல்கள் உள் புகுந்தன
மிகப்பெரிய இயற்கை அழிவை ஏற்படுத்தி மருதம் நிலத்தை உருவாக்கினார்கள். முல்லை நிலத்தை அழித்ததும் மட்டுமல்லாமல் முல்லைநில மக்களை இழுத்து வந்து வலுக்கட்டாயமாக வேலைக்கு உட்படுத்தி அடிமைகளாக ஆக்கப்பட்டனர் மறுப்போர்களை கொத்துக்கொத்தாக அழித்தன.
அந்த மருத நிலத்தை உருவாக்கியவன் இந்திரன் எனப்பட்டான் அவன் வரலாற்றில் கொடுமை செய்தவன் தீயவன் என அனைவராலும் அழைக்கப்பட்டவன். தமிழ் தேசத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இதேபோல காடுகளை அழித்து வயல்வெளிகளாக மாற்றி அந்த அந்த மண்ணில் வாழும் மக்களை உழு அடிமைகளாக மாற்றியது பனியா வணிக கும்பல்.
தமிழ் தேசத்தில் மட்டும் தாழ்த்தப்பட்டவர்கள் உண்டு என்று நினைத்தால் நாமே முட்டாள்கள் ஆவோம் உலகம் முழுவதும் பல இனங்கள் இந்த வணிக கும்பல்களால் தாழ்த்தப்பட்டடிருக்கின்றன.
சாதாரணமாக உழைத்து வாழ்ந்து வந்த மக்களை வணிக நோக்கில் உபயோகித்து உலகையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அடிமை ஆக்கி உலகத்தை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றதே இந்த மருதம்தான் ஆனால் அதே இந்திரனை கடவுளாக்கி சாதிப்பெயரிலும் சேர்த்துக்கொள்ளும் அளவிற்கு சூழ்ச்சிகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளன.
மருதம் உருவாக்கப்பட்ட பின்பும் முல்லை மக்களுக்கும் மருதம் மக்களுக்கும் பலமுறை போர் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் உலக வணிக கும்பலை எதிர்த்து பழங்குடியினரால் வெற்றி பெறமுடியவில்லை, பலமாக எதிர்த்தவர்களை திருடன் என பட்டம் கட்டி மற்றருடன் ஒன்றிணையாமல் தனிமைப்படுத்ப்பட்டனர்.இதை திட்டமிட்டு வரலாற்றில் இருந்து நீக்கவும் செய்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment